இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: குமாரபாளையம் அருகே வாய்க்காலில் விழுந்த மரம் அகற்றம்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.;

Update: 2021-10-07 11:45 GMT

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் கன மழையின் காரணமாக வாய்க்காலில் விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் கன மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று சில நாட்கள் முன்பு வாய்க்காலில் சாய்ந்தது.

இது அகற்றப்படாததால் தண்ணீரில் மிதந்து வரும் செடி கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் யாவும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இது பற்றி இப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில்  இந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் ஆட்கள் மூலம் வெட்டி அகற்றினர். இதனால் இப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News