பள்ளிபாளையத்தில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

பள்ளிபாளையம், புதன்சந்தைப்பேட்டையில், நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2021-10-23 08:00 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள, ஸ்ரீ மெடிக்கல் மற்றும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம், நாளை (24.10.2021 - ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் மெயின் ரோட்டில் உள்ள, புதன்சந்தைப்பேட்டை ஸ்ரீ மெடிக்கல் வளாகத்தில், நாளை காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:30 மணி வரை, மருத்துவர்கள் கண் பரிசோதனை நடத்தி, பயனாளிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவுள்ளனர்.

எனவே, பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கண் பரிசோதனை செய்து பலன் அடையுமாறு, முகாம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 88254 44858 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News