நகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமான நிலையில் இருந்தது. இதனை புதிய கட்டிடமாக மாற்றக்கோரி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த உமா, ராஜீவ் ராமசாமி மற்றும் ஒசாட் பொதுநல அமைப்பினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள் கட்டிடம் கட்டி கொடுத்தனர். அதன் திறப்பு விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். கட்டிடம் கட்டி கொடுத்தவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் பி.டி.ஏ.நிர்வாகி ரவி, நகரில் உள்ள இதர நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.