குமாரபாளையத்தில் விஸா பொதுநல அமைப்பினர் கண்காட்சி

குமாரபாளையத்தில் விஸா பொதுநல அமைப்பினரின் சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது.

Update: 2021-12-24 04:45 GMT

குமாரபாளையம்,  புத்தர் வீதியில் விஸா பொதுநல அமைப்பினரின் கண்காட்சி நடைபெற்றது. நிறுவனர் விசாலாட்சி தலைமை வகித்தார். இதன்  துவக்க விழாவில்,  முன்னாள் நகர்மன்றத்  தலைவி ரிப்பன் வெட்டி,  கண்காட்சியை துவக்கி வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். கண்காட்சியில்,  முதல் விற்பனையை அவர் தொடங்கி வைக்க, மல்லிகா, சுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த கண்காட்சியில் பட்டு, சிந்தடிக், காட்டன், உள்ளிட்ட பல வகை சேலைகள், கவரிங் நகைகள், ஜாக்கெட், புடைவைகளுக்கு வைத்து தைக்க அலங்கார டிசைன் பார்டர்கள், டெரகோட்டா எனப்படும் உயர்வகை களிமண் ஆபரணங்கள், நவதானிய பிஸ்கட், கேக், உலர் பழ வகைகள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகள் ரெடிமேட் ஆடைகள், பெயிண்டிங், உள்ளிட்ட பல வகையான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

நுழைவுக்கட்டணம் இலவசம். இந்த கண்காட்சியின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம்,  ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, கண் சிகிச்சை முகாம், பொது சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் உள்ளிட்ட சேவைப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று நிறுவனர் விசாலாட்சி கூறினார். நிர்வாகிகள் பலரும் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News