சிறு சாயப்பட்டறை சங்கத்தார் நிர்வாக குழு கூட்டம்!

குமாரபாளையம் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது.

Update: 2024-11-26 12:00 GMT

படவிளக்கம் :

குமாரபாளையம் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது.

சிறு சாயப்பட்டறை சங்கத்தார் நிர்வாக குழு கூட்டம்

குமாரபாளையம் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது. குமாரபாளையம் சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிர்வாக குழுக் கூட்டம் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. இது குறித்து பிரபாகரன் கூறியதாவது:

காட்டன் ஜவுளிகள் தயாரிக்க சிறு சாயப்பட்டறைகள் அவசியம். விசைத்தறிகள் முழுமையாக செயல்பட சிறு சாயப்பட்டறைகளை அவசியம் காக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைத்தால், ஜவுளி உற்பத்தி தொழில் மேன்மை பெறுவதுடன், காவிரி நீரும் தூய்மையானதாக இருக்கும். ஆகவே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டதால், ஜவுளித்தொழில் 80 சதவீதம் பாதிக்கப்பட்டு, பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. செயற்கை இழைகளை கொண்டு ஜவுளிகள் தயாரிக்க வேண்டியுள்ளது. பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஜவுளித்தொழில் பாதுகாக்கப்படும், இதனை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்க செயலர்கள் வேலுமணி, நாகராஜ், பொருளர் மாதேஸ்வரன், நிர்வாகிகள் அப்துல் சுக்கூர், அண்ணாதுரை, முருகானந்தம், சுப்ரமணி, குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News