புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற ஈரோடு எம்.பி.

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் ஈரோடு எம்.பி., தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலர் உள்பட பலர் பங்கேற்றனர்;

Update: 2025-01-07 12:15 GMT

படவிளக்கம் : குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் ஈரோடு எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலர் உள்பட பலர் பங்கேற்றனர்

புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற ஈரோடு எம்.பி.

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் ஈரோடு எம்.பி., தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலர் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நான்காம் ஆண்டாக விடியல் ஆரம்பம் சார்பாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், ஈரோடு எம்.பி. பிரகாஷ், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சந்திரகுமார், குமாரபாளையம் வடக்கு நகர தி.,மு.க. செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர செயலாளர் ஞானசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பொன்னாடை அ4ணிவித்து புத்தகங்கள் வழங்கினார். அனைவரும் புத்தக திருவிழா சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நகர மன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், ஜேம்ஸ், ராஜு, மற்றும் பொறுப்பாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.


Tags:    

Similar News