குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-29 10:45 GMT

பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர்  குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் போராட்டத்தை துவக்கி வைத்தார். பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கைவிட வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை உடனே நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க, தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் ஐ.என்.டி.யூ.சி. ஜானகிராமன், சி.பி.எம். நகர செயலர் சக்திவேல், சண்முகம், நஞ்சப்பன், பாலுசாமி, தொ.மு.ச. அருள் ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் சேகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ரவி, சத்தியசீலன், ராஜ்குமார், பாலசுந்தரம், கட்டிட கட்டுமான பிரிவு ராமசாமி, தி.மு.க. பேச்சாளர்கள் ஆனந்தன், அன்பழகன், நகர பொறுப்பு குழு அன்பு, ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News