குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் டூவீலர்களால் பயணிகள் அவதி
குமாரபாளையம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் டூவீலர்களால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, பழனி, சென்னை செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி செல்லும் பஸ்கள், சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இட நெருக்கடி அதிகம் உள்ள நிலையில், அதிக அளவிலான டூவீலர்கள் இந்த பஸ் நிலையம் வழியாக சென்று சேலம் சாலைக்கு சென்று வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் பஸ்சை விட்டு இறங்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் பஸ் விட்டு இறங்கும் போது வேகமாக வரும் டூவீலர் ஓட்டுனர்கள் பயணிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்திற்குள் டூவீலர்கள் வருவதை தடுக்க போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.