குமாரபாளையம் அருகே விடியல் ஆரம்பம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி
குமாரபாளையம் அருகே விடியல் ஆரம்பம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி முகாம் துவங்கியது.;
குமாரபாளையம் அருகே அருவங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் ஃபோனடிக்ஸ் மற்றும் ஃபோனாலஜி ஆங்கில உச்சரிப்பு 20 நாட்கள் பயிற்சி முகாம் துவங்கியது.
இந்த பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் வெற்றிவேல், விடியல் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் ரவி தொடங்கி வைத்தார்.
பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் சண்முகம் உள்பட பலர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஃபோனடிக்ஸ் மற்றும் ஃபோனாலஜி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி புத்தகத்தை வழங்கினார்கள். கடந்த கல்வியாண்டில் இந்த பயிற்சி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.