எல்லை மாரியம்மன் கோவிலில் பாலாய பாலஸ்தாபன விழா
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் பாலாய பாலஸ்தாபன விழா நடைபெற்றது;
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் பாலாய பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனதையொட்டி, நேற்று மாலை 04:00 மணியளவில் பாலாய பாலஸ்தாபன விழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதையடுத்து புண்யாக வாசனம், பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, பூர்ணா ஹூதியும், இதையடுத்து நேற்று இரவு 08:30 மணிக்கு மகா கணபதி, கல்யாண விநாயகர், செந்தூர் முருகன், பரிவார மூர்த்திகள், எல்லை மாரியம்மன் சுவாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை சுவாமிநாத சிவாச்சாரியார், வேத சங்கர சத்யோஜத சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர்.