குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-04-01 07:42 GMT

 தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்து, வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யும் பணிகள் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் நடைபெறும் இப்பணிகளை விரைந்து முடிக்கவும் தொடர்ந்து தவறின்றி வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்யுமாறும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு  ஆலோசனை  வழங்கினார். இந்தப் பணியின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறையினர் இருந்தனர்

Tags:    

Similar News