ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு: குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
இந்தியாவின் ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டதற்கு குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.;
இந்தியாவின் ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதிமுர்மு தேர்வு செய்யப்பட்டதையடுத்து இதனை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கொண்டாடிய விழாவில் அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் சரவணராஜன் பேசினார்.
இந்தியாவின் ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனைக் கொண்டாடும் விதமாக குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த விழாவில் நகர தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன் வாழ்த்தி பேசினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பொது செயலர்கள் தனசேகரன், சண்முகசுந்தரம், முன்னாள் நகர தலைவர் ராஜு, மகளிரணி நிர்வாகிகள் கங்கேஸ்வரி, புவனேஸ்வரி, வாணி, கவுரி சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.