குமாரபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்

குமாரபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-02-01 16:30 GMT

வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயற்சிகள் நடக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய குமாரபாளையத்தில் கைத்தறி ஆய்வாளர் செல்வம், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் செல்வராசு, துணை வேளாண்மை அலுவலர் கருப்பண்ணன் தலைமையிலான மூன்று பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவில் போலீசாரும் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News