குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சாவு
குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன், 83. ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர். இவர் மாலை 1:30 மணியளவில் பல்லக்காபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தனது டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தில் சாலையை கடந்தார்.
அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் இவர் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, கார் ஓட்டுனரான பெங்களூரை சேர்ந்த ஐ.டி., நிறுவன பணியாளர் கோவிந்தராஜ்,42, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.