பள்ளிபாளையம் காவிரியாற்றில் குதித்து முதியவர் சாவு: போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் உள்ள காவிரியாற்றில் குதித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2021-09-25 13:45 GMT

பள்ளிப்பாளையம் காவல் நிலையம்.

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி, 71, கூலி தொழிலாளி. இவருக்கு பல மாதங்களாக நெஞ்சு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இவர் பள்ளிபாளையம் ஈரோடு பாலத்தின் மீதிருந்து காவிரியாற்றில் பக்கவாட்டு சுவர் மீது ஏறி நின்று குதித்துள்ளார். பலத்த காயமடைந்த இவரது உடலை முதல் நாள் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டாம் நாள் மீனவர்கள் உதவியுடன் அவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News