பழுதான மின் கம்பங்கள் - மின்வாரிய உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
குமாரபாளையத்தில், பழுதான மின் கம்பங்களை, மின்வாரிய உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.;
குமாரபாளையம் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில், உடையார்பேட்டை, கலைமகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பழுதான மின் கம்பங்களை புதிய மின் கம்பங்களாக மாற்றி தர வேண்டியும், வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை இடம் மாற்றி அமைக்கவும் வேண்டி, மின்வாரிய உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. ம.நீ.ம. நகர செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா உள்ளிட்டோர் மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம், இதற்கான மனு கொடுத்தனர்.
இந்த மனு மீதான விசாரணைக்காக, மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன் மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, மகளிரணி நிர்வாகிகள் மின் கம்பம் சேதம் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ள மூன்று கம்பங்களை விரைவில் புதிய மின் கம்பங்களாக மாற்றிடவும், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றி அமைக்கவும் உறுதியளித்தார்.