அதிகாலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்ட மக்கள்

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதால், அதிகாலை 3:00 மணிக்கே தடுப்பூசி முகாம் பகுதிகளில் மக்கள் வந்து காத்திருந்தனர்

Update: 2021-06-23 12:00 GMT

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள,அதிகாலை 3:00 மணி முதல் காத்திருக்கும் பொதுமக்கள்..

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மையங்களில் வழங்கபட்டு வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்கபட்டு வருகிறது. எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால் பல முகாம்களில் தள்ளுமுள்ளு, மருத்துவ ஊழியர்களிடம், பொதுமக்கள் வாக்குவாதம் செய்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசிகள் இன்று 280 நபர்களுக்கு வழங்கபடும் என தெரிவிக்கப் பட்டது.

இதனையடுத்து தாமதமாகச் சென்றால் தடுப்பூசிகள் கிடைக்காது என்ற அச்சத்தில் அதிகாலை 3:00 மணி முதலே பொதுமக்கள் காத்திருக்கத் தொடங்கினார். அதன் பிறகு 8:00 மணியளவில் வந்த மருத்துவ ஊழியர்கள், காத்திருந்த மக்களுக்கு டோக்கனை வழங்கி தடுப்பூசி போட்டனர். பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும், அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது பொதுமக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

Tags:    

Similar News