போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;
போலி லாட்டரி சீட்டு விற்ற
இருவர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற
இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். மேட்டுக்கடை, உழவர் சந்தை ஆகிய பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெள்ளை தாள்களில் நம்பர்கள் எழுதி, போலி லாட்டரி விற்ற முத்துச்சாமி, 49, அண்ணாதுரை, 52, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, நம்பர்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் தலா 5 பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.