தண்ணீர் பற்றாக்குறையால், அம்மா திருமண மண்டப பணியாளர்களிடம் மக்கள் வாக்குவாதம்

தண்ணீர் பற்றாக்குறையால் அம்மா திருமண மண்டப பணியாளர்கள்,ஒப்பந்ததாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-01 14:30 GMT

 கட்டுமான பணியாளர்கள், ஒப்பந்த மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் அம்மா திருமண மண்டபம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. போர்வேல்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் சில வாரங்களாக இப்பகுதியில் ஊராட்சி சார்பில் தண்ணீர் வினயோகம் 2 நாட்களுக்கு ஒருமுறை 30 நிமிடம் மட்டும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை அம்மா மண்டப பணியாளர்கள் உபயோகப்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கட்டுமான பணியாளர்கள், ஒப்பந்த மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை உருவானது.

அங்கு வந்த ஊராட்சி தலைவர் புஷ்பா செல்லதுரை, அம்மா மண்டப பணியாளர்கள் இனி மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள். லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து கட்டுமான பணிகள் செய்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இதனால் பொதுமக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து களைந்து சென்றனர்.

படவிளக்கம் :- குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை அம்மா மண்டப பணியாளர்கள் உபயோகப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கட்டுமான பணியாளர்கள், ஒப்பந்த மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News