கோவில் திருவிழாக்களால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்..!

குமாரபாளையத்தில் சவுண்டம்மன் திருவிழா, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பக்தர்கள் பெரும்பாலோர் விரதமிருந்து வருவதால் இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2024-01-17 15:15 GMT

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் கோவில் விழாக்களுக்காக விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் சவுண்டம்மன் திருவிழா, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக பக்தர்கள் பெரும்பாலோர் விரதமிருந்து வருவதால் இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் திருவிழா மற்றும் அனைத்து சமூக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருவதால், பக்தர்கள் பெரும்பாலோர் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:

குமாரபாளையம்-சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் திருவிழா மற்றும் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருவதால், பக்தர்கள் பெருமளவில் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் பொங்கல் திருவிழாவின் கறி நாளாக இருந்தும், பொதுமக்கள் இறைச்சி வாங்க வராததால் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது. இரு விழாக்களும் முடிந்தால்தான் பொதுமக்கள் இறைச்சி வாங்க வருவார்கள்.

வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, தை பொங்கல், மாட்டு பொங்கல், தை பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஸ்ரீராமநவமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, மகாளய அமாவாசை, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, கந்தசஷ்டி சூரசம்ஹாரம், கார்த்திகை தீப திருநாள், இது தவிர மாதம் தோறும் சஷ்டி, அமாவாசை, கிருத்திகை, மாத சிவராத்திரி, என்பது போன்ற நாட்களில் பொதுமக்கள் இறைச்சி வாங்க வராததாலும் எங்கள் வியாபாரம் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.a

Tags:    

Similar News