கமல் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய டி.எஸ்.பி
kumarapalayam news- குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.;
kumarapalayam news- குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
நவ. 7ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமலஹாசனின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் கட்சிகொடியினை மாவட்ட செயலர் காமராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சேலம் டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, மரம் நடுதலின் அவசியம் குறித்து பேசினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் நந்தகுமார், உஷா, விமலா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடந்தது.மேலும் நவ. 18,19 ஆகிய சனி, ஞாயிறுகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.
காலியாக உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில், தபால் நிலையம் அமைக்க மக்கள் நீதிமய்யம் கோரிக்கை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு தபால் நிலையம் மையப்பகுதியில் ஜே கே கே ரோட்டில் 40 வருடகாலமாக செயல்பட்டு வந்த அஞ்சலகத்தின் கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர்.ஆனால் அந்த அஞ்சலகத்தை கோவை சேலம் நெடுஞ்சாலையில் வட்டமலை அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குள் செயல்பட்டு வந்தது.முதியோர்கள்,மாற்றுத்திறனாளிகள்,மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் நெடுஞ்சாலையை கடந்து தபால் நிலையத்திற்கு செல்வது உதவித்தொகை,சேமிப்புத்தொகை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
மக்க ளின் நலன் கருதி தபால் நிலையத்தை குமாரபாளையம் மையப்பகுதிக்குள் கொண்டு வரவேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பாக நாமக்கல் கோட்ட அலுவலரிடம் நேரில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தனியார் கல்லூரியில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் தற்போது 3கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிப்பாளையம் ரோடு காந்திநகரில் தபால் நிலையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
குமாரபாளையம் காவல்நிலையம் பின்புறம் ஜே கே கே ரோட்டில் செயல்பட்டு வந்த நகராட்சிக்கு சார்ந்த பழைய பத்திரப்பதிவு அலுவலகம் தற்போது காலி செய்யப்பட்டுள்ளது.அந்த கட்டிடத்தில் காந்திநகரில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தை மையப்பகுதிக்குள் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆகையால் தாங்கள் அந்த கட்டிடத்தினை ஆய்வு செய்து தபால் நிலையம் இதில் செயல்படுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.