பிளெக்ஸ் உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி. ஆலோசனை..!
குமாரபாளையம் பிளெக்ஸ் உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.;
குமாரபாளையம் பிளெக்ஸ் உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி. ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர், வருவாய்த்துறையினர், தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். போலீசார் தங்கள் பணியை துவங்கி செய்து வருகின்றனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் ஆய்வு, தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் போலீசார் நியமித்தல், தேர்தல் பாதுகாப்பு பணிகள் சம்பந்தமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பிளெக்ஸ் உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்களுடன் திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை நடத்தினார். அரசியல் கட்சியினர் சம்பந்தமான பணிகளின் போது, அச்சிடப்படும் வார்த்தைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும், போலீஸ் சொல்லும் எல்லை மீறி செயல்படக் கூடாது, தேர்தல் முடியும் வரை அச்சடிக்கப்படும் பணிகள் குறித்து பதிவேட்டில் பதிய வேண்டும், யாருடைய மனமும் பயன்படும்படி வார்த்தைகள் பயன்படுத்தி அச்சடிக்க கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் குறித்து டி.எஸ்.பி. அறிவுறுத்தினார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
தேர்தல் அறிவிப்புக்குப்பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடியும் வரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை கண்காணிக்கும் வகையில் இன்று டிஎஸ்பி குமாரபாளையம் பிளக்ஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.