அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், மன வலிமை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், மன வலிமை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், மன வலிமை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ், தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடந்தது. நினைவாற்றல், மனவலிமை, மற்றும் போதை ஒழிப்பு குறித்து உளவியலாளர் சண்முகசுந்தரம் பங்கேற்று பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விநாடி வினா போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆசிரிய, ஆசிரியைகள் ராதா, மாதேஷ், குமார், முத்து, அமைப்பின் நிர்வாகி தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், மன வலிமை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி விடியல் ஆரம்பம் சார்பில் நடந்தது.