அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்கப்பட்டது;
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்கப்பட்டது
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்கப்பட்டது. முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் பங்கேற்று பேசினர். நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போதை ஒழிப்பு பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தினார். இதில் டாக்டர் இந்துமதி, அர்ச்சனா, மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கோவிந்தராஜ் செய்திருந்தார் .
படவிளக்கம் :
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.