சட்டக்கல்லூரி மாணவர், தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் தலை மறைவு

குமாரபாளையத்தில் சட்டக்கல்லூரி மாணவர், தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் தலை மறைவாகினர்.;

Update: 2025-03-21 16:09 GMT

சட்டக்கல்லூரி மாணவர், தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் தலை மறைவு


குமாரபாளையத்தில் சட்டக்கல்லூரி மாணவர், தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் தலை மறைவாகினர்.

சேலம் சட்டக்கல்லூரி மாணவர் கவுசிக், 19. இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர். சேலம் அருகே உள்ள காக்காபாளையம் சட்டக்கல்லூரியிலிருந்து, பவானி செல்லும் தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 04:30 மணியளவில் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, பேருந்தின் முன்பு, போதையில் மூன்று நபர்கள் டூவீலரில் அங்குமிங்கும் ஓட்டிக்கொண்டிருந்தனர். இதனால் பேருந்தின் ஓட்டுனர் ஹாரன் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த மூவர், பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் பேருந்தின் முன்பு டூவீலரை நிறுத்தி, தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதனை சட்டக்கல்லூரி மாணவர் கவுசிக் தட்டிக்கேட்டார். அதனால், அவரை மூன்று பெறும் கைகளால் தாக்கி, சட்டையை கிழித்தனர். இது பற்றி பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் இருவரும் அவர்களிடம் கேட்க, அவர்களையும் அடித்துள்ளனர். இதனால் கவுசிக் குமாரபாளையம் போலீசில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் அவர்கள் மூவரும் கார்த்தி, செல்வம், ஜெகதீஷ் என்பதும், அவர்கள் தலைமைவாகினர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News