குமாரபாளையத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குமாரபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.;
குமாரபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், காவிரியில் நீர் இல்லாமல் வறட்சியாக காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்து போர்வெல்களில் நீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரபாளையத்தில் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில் பின்புறம், நடராஜா நகர் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து பல வாரங்களாக குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தண்ணீர் பஞ்சம் உள்ள நிலையில் தாமதம் செய்யாமல் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாகாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.