கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி..!

கூட்டு குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குடிநீர் வீணாவதை தடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-28 04:38 GMT

குமாரபாளையம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது நிறைவுப்பணியை அடைந்துள்ளது.

இதன் குடிநீர் குழாய் ஒன்று சேலம் கோவை புறவழிச்சாலை எதிர்மேடு, டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலை பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பல கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தால் பல ஊர்கள் பயன் பெறும் நிலையில், இது போல் இந்த இடத்தில் பல நாட்களாக தண்ணீர் வெளியேறி வருவது குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். யாருக்கும் பயன்படாமல் வெளியேறும் நீர் சாலையில் ஓடி, சேறும், சகதியுமாக மாறி வருகிறது. மேம்பாலப்பணிக்கு வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளதால், அனைத்து வாகனங்களும் இந்த தண்ணீர் மேல்தான் சென்று வருகிறது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழாய் உடைப்பை சரி செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News