குமாரபாளையத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்: நாஞ்சில் சம்பத் பங்கேற்பு
குமாரபாளையத்தில் நாஞ்சில் சம்பத் கூட்ட ஏற்பாடுகள் தி.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.;
குமாரபாளையத்தில் நாஞ்சில் சம்பத் கூட்ட ஏற்பாடுகள் தி.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் இன்று எஸ்.எஸ்.எம்.மகாலில் மாலை 04:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட செயலர் மூர்த்தி தலைமை வகிக்க உள்ளார். சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்று, திசைகளை தீர்மானித்த திராவிட இயக்கம் எனும் தலைப்பில் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலரும் செய்து வருகின்றனர்.