10 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் ஜி.ஹெச்.க்கு வழங்கிய டாக்டர் சண்முகம்
குமாரபாளையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை ஜி.ஹெச்.க்கு பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி டாக்டர் சண்முகம் வழங்கினார்.;
குமாரபாளையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் ஜி.ஹெச்.க்கு பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி டாக்டர் வழங்கினார்.
பா.ஜ.க. முன்னாள் மாநில மருத்துவரணி துணை தலைவர் சண்முகம் தன் மருத்துவமனையில் பயன்படுத்தி வந்த மருத்துவமனை 10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். இதற்கான நிகழ்வு குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் நகர பா.ஜ.க. தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது. டாக்டர் சண்முகம், மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட பார்வையாளர் சிவகாமி, மாவட்ட பொது செயலர்கள் நாகராஜன், சேதுராமன் , நகர துணை செயலர் இந்திரா ஆகியோர் உபகரணங்களை வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்.
இது பற்றி டாக்டர் பாரதி கூறியதாவது:
பாய்லர் கருவி, ஒ.பி. டேபிள், ஒ.டி. லைட், ஆட்டோகிளான், ஆக்சிஜன் சிலிண்டர், லேபர் போர்டு, வூபேர் பெஞ்ச்கள், சக்கர நாற்காலிகள், சுக்சன் கருவிகள், ஒ.டி. உபரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் டாக்டர் சண்முகம் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வந்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அவசியமான பொருட்கள் தான். இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் கண்ணன்குமார், செயலர் கங்கேஸ்வரி, நகர மகளிர் அணி தலைவி சிவகாமி உள்பட பலர் பங்கேற்றனர்.