குமாரபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்
மரக்கால்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சேவை அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மரக்கால் காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஆண்டாள் சேவை மையம் மற்றும் SEWA இன்டர்நேஷனல் சார்பாக, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குதல் மற்றும் செவிலியர்களுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டு, உபகரணங்களை வழங்கினார். உடன், மருத்துவ அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.