குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!

குமாரபாளையத்தில், தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2021-06-13 13:37 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  தாலுக்கா அலுவலகம் பின்புறம் மேற்கு காலனி பகுதியில்,  அதிகம் குடியிருப்பு பகுதியில், நாய்கள் கூட்டமாக திரிகின்றன.

இதனால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி வரும் பொதுமக்கள், நடந்து செல்வோரை, தெரு நாய்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு  துரத்துகின்றன. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, தனியே வரும் குழந்தைகளுக்கு, இந்த நாய்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News