இரத்த தானம் செய்வதால் நமது உடலிற்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா?

இரத்த தானம் செய்வதால் நமது உடலிற்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என டாக்டர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

Update: 2023-03-19 09:45 GMT

குமாரபாளையம் தேவாங்கர் மகாஜன சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் தேவாங்கர் மகாஜன சொசைட்டி , தேசிய வைர மலர்கள் அமைப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் குமாரபாளையத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 37 பேர் இரத்ததானம் வழங்கினர். டாக்டர் செந்தில்குமார் குழுவினர் பங்கேற்று இரத்ததானம் முகாமில் சேவையாற்றினர்.

இதே போல் குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தனியார் சேவை மையம், சேலம் இரத்த வங்கி சார்பில் இரத்ததான முகாம் முதல்வர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் ஸ்ரீராம் மற்றும் குழுவினர் முகாமில் பங்கேற்று இரத்த வகைகளை சேகரித்தனர். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் வழங்கினர்.

இரத்த தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

இரத்ததானம் செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிகின்றது.புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றது. இதனால் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,,ரத்ததானம் செய்வதால், ரத்த அழுத்தம் சீராகி, அதனால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது, பக்கவாதம் வருவது குறைகிறது. கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்று நோய் வரமால் தடுக்கலாம். சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறையும் ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது. மேலும் ஒருவர் இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் வருடத்திற்கு ஆறு முறை வரை இரத்த தானம் செய்வது பாதுக்காப்பானது ஆகும். மேலும் இரத்த தானத்தில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க ஒவ்வொரு முறை இரத்தம் எடுக்கும்போதும் புதிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அனைவரும் இரத்த தானம் செய்ய முடியாது. டிமென்ஷியா அல்லது எச்.ஐ.வி வைரஸ் போன்று தொற்று உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது. அதன் மூலம் அவர்கள் தொற்றை மற்றவர்களுக்கு பரப்பி விட நேரிடும். எனவே பாதுக்காப்பாக இரத்த தானம் செய்வது எப்படி என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும்.

இரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் இரத்தத்தை முழுவதுமாக தானம் செய்யலாம். அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற இரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம். இரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள இயந்திரமானது இரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது.

ஒவ்வொரு இரத்த நன்கொடையை செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுக்காப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறையும் நீங்கள் முழுமையாக இரத்த தானம் செய்ய முடியும். எனவே ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை இரத்த தானம் செய்ய முடியும் என நியூயார்க் இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் கூறுகிறார். அதே போல நீங்கள் இரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்.

பிளேட்லேட்கள் இரத்தப்போக்கை நிறுத்த உதவுகின்றன. மேலும் இரத்த உறைவிற்கு முக்கியமான புரத கட்டிகளை கொண்டு செல்லும் இரத்தத்தின் திரவ பகுதியாக ப்ளாஸ்மா உள்ளது. சிவப்பு ரத்த அணுக்கள் உங்கள் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றன.

ஆண்டுக்கு 24 முறை இரத்த பிளேட்லேட்டுகளை நன்கொடையாக வழங்கலாம். அதே போல ஆண்டிற்கு 12 முறை பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கலாம். சிவப்பு இரத்த அணுக்களை விட நமது உடல் பிளாஸ்மா மற்றும் பிளேட்லேட்களை வேகமாக உற்பத்தி செய்வதால் அவற்றை நாம் அடிக்கடி தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்வது மிகவும் பாதுக்காப்பான ஒரு செயலாகும் என்று ஸ்டான்போர்டு இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான தோ பாம் கூறுகிறார். இருப்பினும் நீங்கள் அடிக்கடி தானம் செய்தால் அதனால் உங்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம். உங்கள் இரத்தத்தில் போதுமான அளவில் இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இந்த பிரச்சனைகள் ஏற்படும்.எனவே ஒவ்வொரு நன்கொடைக்கு முன்பும் நன்கொடை செய்பவர் உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிப்பார்ப்பது அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News