தி.மு.க. மாணவர் அணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை
குமாரபாளையத்தில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது.;
தி.மு.க. மாணவர் அணி சார்பில்
தீவிர உறுப்பினர் சேர்க்கை
குமாரபாளையத்தில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி ஆலோசனையின் பேரில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மூர்த்தி, மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி நல்லாசியுடன் குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க பொறுப்பாளர் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் தலைமையில்
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, குமாரபாளையம் வடக்கு நகரம் பாகம் எண் 4,6,12, 13, 14, 16, 18, 39, 40 ஆகிய வாக்குச்சாவடிக்குரிய பகுதிகளில், இல்லம்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நடந்தது. புதிய உறுப்பினர்களுக்கு, அவர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்து, நகாட்சி தலைவர் விஜய்கண்ணன் வாழ்த்து கூறினார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், வார்டு செயலாளர்கள் சசிகுமார், ரங்கநாதன், ராஜ்குமார், வில்வராஜ் மற்றும் நகர மாணவரணி நிர்வாகிகள் தில்லைநிதி, விக்னேஷ், ரமேஷ் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தது.