வார்டு வாரியாக தி.மு.க.வினர் பிரசாரம்..!

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்தனர்.;

Update: 2024-03-21 15:30 GMT

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு தி.மு.க. சார்பில் வார்டு வாரியாக தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசியதாவது:

முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற செய்ய அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க. சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மாற்றுக்கட்சியினர் பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர் ஜேம்ஸ், நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கந்தசாமி மற்றும் வெங்கடேசன், வார்டு கழக உறுப்பினர்கள் மகளிர் அணியினர் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

எல்லோருக்கும் எல்லாம் தலைப்பில் குமாரபாளையத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நாட்டுபுற கலைஞர் திருச்சி கோமகன் இசை நிகழ்ச்சி நடந்தது. மோடியை கிண்டல் செய்யும் வகையில் முகமூடி அணிந்து பார்வையாளர்களுக்கு வடை கொடுக்கப்பட்டது. சிறப்பு பேச்சாளர் முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி பேசியதாவது:

திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் தி.மு.க. ஆட்சியில்தான் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பல மக்கள் மாண்டு போனார்கள். பல தொழில்கள் அழிந்து போனது. மாதம் தோறும் இல்லத்தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்பட்டது. மகளிர் குழுக்களுக்கு பல உதவிகள் செய்து தரப்பட்டது. 2006இல் இருந்து கருணாநிதி இருந்த போதுதான் சத்துணவில் முட்டை, வாழைப்பழம் சேர்த்து, முழுமையான சத்துணவாக வழங்கப்பட்டது. நம் முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கியதால், கிராமப்புற மாணவ, மாணவியர் மிக மகிழ்வுடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். கிராமப்புற பெற்றோர்கள் துயர் தீர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் இது.

காலை உணவு திட்டத்தால் 40 சதவீதம் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் செயல்படுத்தி வருகிறார்கள். நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மாணாக்கர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. குடிசை இல்லா தமிழகம் என்பது கலைஞர் கனவு. இதற்காக 3 ஆயிரத்து 500கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 78 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது. உழவர் நலனுக்காக தனி நிதி நிலை அறிக்கை முதலாக கொண்டு வந்தது நமது தமிழகம். திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க செய்வது தான். 24மணி நேரமும் தமிழக மக்களுக்காக சிந்திக்கும் ஒரே தலைவன் நமது முதல்வர். தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் 2.5 சதவீதம் பேர் மட்டுமே. வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை நாம் விரைவில் அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News