தி.மு.க.பேச்சாளர் மகள் திருமணத்தில் நேரில் வாழ்த்திய தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்
குமாரபாளையம் தி.மு.க. பேச்சாளர் அன்பழகனின் மகள் திருமணத்தில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் வாழ்த்தினர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அன்பழகன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் பேச்சாளராக இருந்து வருகிறார். எம்.எஸ்.சி., எம்.பில், படித்த இவரது மகள் இந்துஜாவிற்கும், பி.ஈ.படித்த கார்த்திகேயனுக்கும் குமாரபாளையம் லட்சுமி மகாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, ஒன்றிய செயலர் யுவராஜ், குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகி ஜே.கே.கே.எஸ். மாணிக்கம், நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகிகள் செல்வராஜு, அன்பரசு, ஞானசேகரன், ரவி, ராஜ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.