முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி
பள்ளிபாளையத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் அரிசி,பருப்பு மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.;
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலைஇழப்பை சந்தித்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 60-பேருக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், முன்களப்பணியாளராக பணியாற்றும் பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மளிகை பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில், ஏராளமான திமுக பிரமுகர்களும் பிரதிநிதிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.