தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.;
தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்
திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும், ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர், வடக்கு நகர பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமை வகிக்க, தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்.பி. திருச்சி சிவா பங்கேற்று பேசியதாவது:
தமிழகம் தரும் வரி 100க்கு, 9 ரூபாய். ஆனால் பெறுவது 4 ரூபாய். உத்தரபிரதேஷ் தருவது 8 ரூபாய், பீகார் தருவது 2.75. ஆனால் அவர்கள் பெறுவது பல மடங்கு . அதிக தொகை கொடுத்து, சொற்ப தொகை பெறுவது நாம் மட்டும்தான். புதிய கல்வி கொள்கை ஏற்க முடியாது. நம் பிள்ளைகள், 1200க்கு, 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆனால் அதை கிடப்பில் போட்டு விட்டு, நீட் எனும் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றால்தான் டாக்டர் ஆக முடியும் என்றால், 12 ஆண்டுகள் கல்வி பயின்ற நாங்கள் முட்டாள்களா? அகிலேஷ் யாதவ் என்னிடம் கேட்டார். ராமேஸ்வரம் சென்றேன். அங்கு ஹிந்தியில் ஒரு போர்டு கூட இல்லை என்று. அதற்கு நான் கேட்டேன், தமிழகத்தில் இருந்து ஏராளமான பேர் காசி வருகிறார்கள். அங்கு நீங்கள் தமிழில் போர்டு வைத்து உள்ளீர்களா? என்று கேட்டேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மொழிக்காக, தாய்மொழி போராட்டத்தில் குமாரபாளையத்தில் உயிர்விட்டவர்கள் 17 பேர். இது போல் பல்லாயிரம் பேர் மாநிலத்தில் உள்ளனர். இதில் மும்மொழிக் கொள்கை எங்கு ஆதரிப்பது? தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வேறு மொழி தேர்வு செய்தால் அதற்கு உரிய ஆசிரியர்கள் பள்ளிகளில் உள்ளார்களா? 25 ஆண்டுகளாக டெல்லியில் இருந்து வருகிறேன். ஐ.ஏ.எஸ். தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன். ஐ.நா. சபையில் பேசி உள்ளேன். யாதும் ஊரே, யாவரும் கேளிர், என அங்கு பேசி வந்துள்ளேன். மொழியை காக்க கருப்பு சிவப்பு கொடி உள்ளது. தொகுதி சீரமைப்பு எனும் பெயரில் பல மாநிலங்களை முதல்வர் ஒருங்கிணைத்து வருகிறார். இதுவரை நான் பேசியதில் யாரையாவது குறை சொல்லி பேசினேனா? நான் வருவது அறிவாலயத்திலிருந்து. என்னால் கழகத்தின் புகழ் அதிகம் ஆக வேண்டுமே தவிர, களங்கம் பெற கூடாது. தி.மு.க. பொதுக்கூட்டம் என்றால், அது மாலை நேர பல்கலைக்கழகங்கள். பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம். நாங்கள் கேட்பது எல்லாம், நான் பேசியது குறித்து, இரவில் தூங்கும் போது நினைத்து பாருங்கள். உண்மை என்று உணர்ந்தால், அதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.பி. பிரகாஷ், மாவட்ட செயலர் மூர்த்தி, தலைமை சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசினார்.