குமாரபாளையத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறக்க தி.மு.க.வினர் மனு
குமாரபாளையத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறக்க வேண்டி தி.மு.க.வினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குமாரபாளையத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறக்க வேண்டி குமாரபாளையம் தி.மு.க.வினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது. புதியதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து தாலுகா அலுவலகம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நகர செயலர் செல்வம், நிர்வாகிகள் ரவி, புவனேஷ், வெங்கடேசன், வினோத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.