தி.மு.க. உள்கட்சி தகராறில் முதல்வர் படத்தை அவமதித்ததாக நால்வர் கைது
குமாரபாளையம் தி.மு.க. உள்கட்சி தகராறில் முதல்வர் படத்தை அவமதித்ததாக நால்வர் கைது செய்யப்பட்டனர்.;
தி.மு.க. உள்கட்சி தகராறில்
முதல்வர் படத்தை அவமதித்ததாக நால்வர் கைது
குமாரபாளையம் தி.மு.க. உள்கட்சி தகராறில்
முதல்வர் படத்தை அவமதித்ததாக நால்வர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் நகர திமுகவினர் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு இரண்டு நகரச் செயலாளர் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு நகரப் பகுதியில் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய கண்ணன் என்பவர் நகர செயலாளராக உள்ளார். கடந்த வாரம் 14 வது வார்டு செயலாளராக உள்ள விஸ்வநாதன் என்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், , கிளை செயல்வீரர்கள் கூட்டம் போட்டதால், மோதல் ஏற்பட்டது. இதனை கேட்ட கிளைச்செயலாளர் விஸ்வநாதனை எதிர் தரப்பினர் அடித்ததால் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று எதிர்தரப்பு ஆதரவாளரான அலெக்ஸ்சாண்டர் என்ற இளைஞர், வார்டு செயலர் விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வரின் படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்தார். இதன் வீடியோ காட்சி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இது குறித்து நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் புகாரின் பேரில், முதல்வர் படம் உடைத்தவர், வீடியோ எடுத்தவர், அதனை மொபைல் போன்களில் ஷேர் செய்தவர் என விஸ்வநாதன், 59, பிரபாகரன், 33, நாகராஜ், 28, அலெக்ஸ்சாண்டர், 30, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.