கூலித்தொழிலாளி மகளுக்கு ஓராண்டுக்கு மருத்துவ உதவி: திமுகவினர் தாராளம்
குமாரபாளையத்தில், கூலித்தொழிலாளியின் மகளுக்கு ஓராண்டுக்கு மருத்துவ உதவிகளை தி.மு.க.வினர் வழங்க முன்வந்துள்ளனர்.;
குமாரபாளையத்தில், தி.மு.க.வினர் மருத்துவ உதவி வழங்கினர்.
குமாரபாளையம், காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45. விசைத்தறி கூலித் தொழிலாளி. இவரது மகள் சர்விகா, 7. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதால் ஒவ்வொரு மாதமும் டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.
கூலித்தொழில் செய்து வரும் சரவணன், தனது குறைந்த வருமானத்தில் இதனை வாங்கி தர இயலவில்லை. இதுபற்றி அப்பகுதி 9வது வார்டு தி.மு.க. பொறுப்பாளர் ஆறுமுகம், 45, என்பவரிடம், தனது நிலையை சரவணன் கூறியுள்ளார். ஆறுமுகம், நகர தி.முக. பொறுப்புக்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகி விஜய்கண்ணன் ஆகியோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமிக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்கித்தர, திமுகவினர் முடிவு செய்து, நேற்று ஒரு மாதத்திற்குரிய மருந்து, மாத்திரைகள் விஜய்கண்ணன் வழங்கியதோடு, மேலும் இரண்டு வருடத்திற்கு இது போல் ஒவ்வொரு மாதமும் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், செந்தில்குமார், ஜில்பிகார்அலி, ஆறுமுகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திமுக நிர்வாகிகளின் இப்பணியை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.