குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் தி.மு.க சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் தி.மு.க., சார்பில் முன்னாள் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், நிர்வாகி விஜய்கண்ணன் தலைமையில் சேலம் மெயின் ரோடு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்,
பின்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், முக கவசங்கள், கிரிமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் சாலைகளில் 113 மரக்கன்றுகள் நட்டனர். இதில் திரளான திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர