புதிய சமுதாய கழிப்பிடங்களை திறந்து வைத்த தி.மு.க. மாவட்ட செயலர்

குமாரபாளையத்தில் புதிய சமுதாய கழிப்பிடங்களை தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் திறந்து வைத்தார்.

Update: 2024-12-04 11:30 GMT

படவிளக்கம் : குமாரபாளையத்தில் புதிய சமுதாய கழிப்பிடங்களை தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் திறந்து வைத்தார்

புதிய சமுதாய கழிப்பிடங்களை திறந்து வைத்த தி.மு.க. மாவட்ட செயலர் - குமாரபாளையத்தில் புதிய சமுதாய கழிப்பிடங்களை தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டம், 24.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பிட திறப்பு விழா நடந்தது. நகர வடக்கு பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தனர். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர், மாவட்ட தி.மு.க செயலாளர் மதுராசெந்தில் பங்கேற்று திறந்து வைத்தார்கள். எம்பெருமாள் லைன் பகுதியில் 24.96 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ராஜாஜி குப்பம் பகுதியில், 24.96 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சமுதாய கழிப்பிடங்கள் கட்டப்பட்டது. அதனையும் மாவட்ட செயலர் மதுரா செந்தில் திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர்கள் அம்பிகா, கோவிந்தராஜ், தீபா, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் கணேஷ், பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News