குமாரபாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர செயலர் செல்வம் பேசினார்.
குமாரபாளையம் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நகர செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில் ஆலோசனை படி, ஜூன் 19ல் திசைகளை தீர்மானித்த திராவிட இயக்கம் எனும் தலைப்பில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசும் கூட்டத்தை, வட்டமலை எஸ்.எஸ்.எம். மகாலில் சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகிகள் ரவி, ரேவதி, உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.