குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கம்
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது.;
கடும் கோடை வெயிலை சமாளிக்க குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் பந்தல் துவங்கப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற துவக்க விழாவில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக நகர பொறுப்புக்குழு தலைவர் மாணிக்கம் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
இதில் முன்னாள் சேர்மன் ஜெகநாதன், நகர பொறுப்பாளர்கள் அன்பரசு, ராஜ்குமார், குமார், ஞானசேகரன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், கதிரவன் சேகர், ரங்கநாதன், அம்பிகா, தீபா, சரவணன், வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.