குமாரபாளையத்தில் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-02-12 15:45 GMT

குமாரபாளையத்தில் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர், மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அனைத்து வார்டுகளுக்கும் சென்று பிரச்சாரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அந்தந்த வார்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் ஆலோசனை வழங்கினார். பிரச்சார நாள் முடிவடையும் நாள் நெருங்குவதால் பயனுள்ள வகையில் பிரச்சார திட்டங்கள் வகுத்து, அதன்படி செயல்பட அறிவுறுத்தினார். நகர பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News