குமாரபாளையத்தில் தி.மு.க. சேர்மன் அணியினரின் அண்ணா பிறந்த நாள் விழா
Happy Birthday Anna in Tamil -குமாரபாளையத்தில் சேர்மன் அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் சேர்மன் தி.மு.க. அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Happy Birthday Anna in Tamil-குமாரபாளையம் சேர்மன் தி.மு.க. அணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அழகேசன், வள்ளியம்மாள், தர்மராஜ், ஜேம்ஸ், சியாமளா, பரிமளம், கிருஷ்ணவேணி, புஷ்பா, ராஜூ, விஜயா, கோவிந்தராஜ், கனகலட்சுமி, பாண்டிசெல்வி, மகேஸ்வரி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஜுல்பிகர்அலி, சரவணன், ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2