குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட திமுகவினர்

குமாரபாளையத்தில் தி. மு.க. இரு கோஷ்டியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.;

Update: 2021-12-18 01:00 GMT

குமாரபாளையத்தில் திமுக இரு கோஷ்டியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

குமாரபாளையம் கே.ஒ.என்.தியேட்டர் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 38. கூலித்தொழிலாளி. தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வருபவர்கள் சிலர், அப்பகுதி பெண்களை கிண்டல் செய்து வந்ததாக  கூறப்படுகிறது.

இவ்வாறு கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக பிரமுகர் கனகராஜ் தனது ஆதரவாளர்களுடன் சென்று குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். இது பற்றி தகவலறிந்த மற்றொரு தி.மு.க. கோஷ்டியினர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குமாரபாளையம் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம்,  நேரில் வந்து இரு தரப்பினரிடம் பேசி சமரசம் ஏற்படுத்தி வைத்தார். அதன் பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News