குமாரபாளையம் நகராட்சி கமிஷனரிடம் திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

குமாரபாளையம் நகராட்சி கமிஷனரை சந்தித்து வார்டு பணிகள் செய்துதரக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-03-17 16:00 GMT

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலாவை நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமையில் சந்தித்து வார்டு பணிகள் செய்து தர தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் விதத்தில் 33 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் சேர்மனாக சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தி.மு.க. அணியில் சத்தியசீலன் போட்டியிட்டார். இதில் விஜய்கண்ணன் 18 ஓட்டுக்கள் பெற்று சேர்மன் பொறுப்பேற்றார்.

சத்தியசீலன் 15 ஓட்டுகளே பெற்றிருந்தார். விஜய்கண்ணனுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தனர். இதனால் தி.மு.க.கவுன்சிலர்கள் தங்கள் வார்டு குறைகளை தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற சேர்மனிடம் சொல்ல தயக்கம் ஏற்பட்டது.

அதனால் நேற்று தி.மு.க. கவுன்சிலர்கள் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நகராட்சி கமிஷனர் சசிகலாவை சந்தித்து, தங்கள் வார்டு குறைகளைக் கூறி, அவைகள் சரி செய்து தர கோரிக்கை வைத்தனர். கமிஷனரும் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி கூறினார்.

Tags:    

Similar News