குமாரபாளையத்தில் தி.மு.க.வினர் நகர்மன்ற தேர்தல் கலந்தாய்வு
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நகரமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நகரமன்ற தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. நகர பொறுப்பாளர் செல்வம், மாவட்ட செயலர் மூர்த்தி, ஒன்றிய செயலர் யுவராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜகன்னாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நகரமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. குமாரபாளையம் நகராட்சி தேர்தலில், நகரமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 33 வார்டுகளுக்கும் சேர்ந்து கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதன் நேர்காணல் நேற்று கட்சி அலுவலகத்தில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் மூர்த்தி பங்கேற்று விருப்ப மனு தாக்கல் செய்த கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து நகர செயலர் செல்வம் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் நகரமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு 33 வார்டுகளுக்கும் சேர்ந்து கட்சி நிர்வாகிகள் 102 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலர் மூர்த்தி பங்கேற்று விருப்ப மனு தாக்கல் செய்த கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் தேர்வு பட்டியல் மாவட்ட செயலரால் வெளியிடப்படும் என அவர் கூறினார்.