குமாரபாளையத்தில் ஓராண்டு சாதனையை கொண்டாடிய தி.மு.க.வினர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை குமாரபாளையம் தி.மு.க.வினர் கொண்டாடினர்.;
திமுக. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டு துவங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், குமாரபாளையம் நகர செயலர் செல்வம் தலைமையில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடினர். நகர நிர்வாகிகள் ரவி, ராஜ்குமார், கவுன்சிலர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.